Posts

Showing posts from October, 2010

நான் பார்த்த கண்ணகி

Image
கண்ணகி பற்றி எழுத ஆரம்பித்த கையோடு வந்த கேரள transfer கொஞ்சம் நம்பள இணையத்திலிருந்து கொஞ்சம் தள்ளி வைத்தது என்னோவோ உண்மை தான்  .. கேரளாவின் கொச்சின்,திருவனந்தபுர இயற்கை அழகும்,நான் கேரளா வந்து ஆன 62 மணி நேரத்தில் 60 மணி நேரம் பெய்த மழையையும், கேரள பெண்களின் அழகையும் சொல்ல ஒரு நாலு வாரம் ஆகும் என நினைக்கிறேன்..மீண்டும் கண்ணகிக்கு வருவோம் .. மதுரைக்கு பேமஸ் கண்ணகி ஆனால் இன்று யாரும் மதுரையில் கண்ணகி பற்றி பேச நினைக்க நேரம் இல்லை நான் மக்களை குறை கூறுவதற்கு முன் ...அந்த காலத்தில் சங்கம் வளர்த்த மதுரை இன்று சாதி சங்ககளின் வளர்பாலும் அரசியல் கட்சி சங்ககளின் வளர்ப்பாலும் வளர்ந்து தன் அழகு இழந்து நிற்கிறது .. இங்கே இப்போது கண்ணகி வந்தால் யாருக்கு லாபம் ...அந்த அம்மாவால் ஓட்டுக்கு பணம் தர முடியுமா ,,இல்லை அந்த அம்மா கைல ஒரு 100 ஓட்டு இருக்கா அல்லது குறைந்த பட்சம் அந்த அம்மாவால ஒரு 20 x 25 கட் அவுட் வைக்க முடியுமா இதுதான் இன்றைய மதுரைவாசிகளின்  எதிர்பார்ப்பு.. மதுரையில் எல்லாருக்கும் தெரிந்த கண்ணகியை விட்டுவிட்டு நான் பார்த்த கண்ணகியை சொல்கிறேன்.. தலையை  உடம்பில்  இருந்து  எடுத்தால் !!!!